நூறு கண்ட என் மஹாபெரியவா


ஶ்ரீ ராமஜயம்

நூறு கண்ட என் மஹாபெரியவா
பூரண ஆயுசு எனக்கும் வேண்டும் தா

பாதி வாழ்க்கை போயிட்டுதே மஹாபெரியவா
மீதில ஞான வேட்கை வீசிடுவாய் மஹாபெரியவா

பாவமூட்டைய உதறி தள்ளி  புண்ணியம் கூட்ட என் மனம் துள்ளி  அலைய வேண்டும்  என் மஹாபெரியவா

உன்னை மட்டுமே நினைக்கும்  பெரும்பேறு வேண்டும் என் மஹாபெரியவா

இந்த அனைத்தும் நடக்குமா அது உனக்கு மட்டும் தானே தெரியும் என் மஹாபெரியவா

ஒரு இச்சை இது மட்டும் மறுக்காம போடு பிச்சை

சதா மஹாபெரியவாபுராணம் படிக்க , கேட்க வேண்டும் , ஆனந்தம் ஸ்புரிக்க வேண்டும்,
மரணம் வரும் தருவாயில்
மஹாபெரியவாளான உன் ஸ்மரணம் வேண்டும். உன் திருவாய் மலர்ந்து என் முன்னே நீ இருக்க வேண்டும்

பசியோடு இரு கையேந்தி நிற்கிறேன்
புசிக்க இல்லை எந்நாளும் உன்னை பூஜிக்க அது உனக்கு தெரியாதா என்ன?
வேதநெறியான பொருளே பிச்சைக்காரனுக்கு தாக்ஷண்யம் காட்டு ஶ்ரீ  தக்ஷிணாமூர்த்தி  ப்ரபோ !!! மனப்பாத்திரம் பார்க்காம பிச்சை போடு க்ருபோ !!

Advertisements

என்னுள் பாய்ந்த வைரம்


ஶ்ரீ ராமஜயம்

ஊனழுக்கு, உள்ளமழுக்கு,
உள்ளனுப்பும் ஊணழுக்கு,
உடையழுக்கு, செல்கின்ற நடையழுக்கு, சொல்கின்ற
நாவுமழுக்கு …ஹ்ம்ம் வழக்கமான என் புலம்பல் தான்..புலம்பெயர்ந்ததால் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது.

நாஅடிமை மீள முயற்சியில்லை, அதனால்
நானுன்னடிமையாகும் பேறில்லை!
கோள்களால் வரும் கோளாறோ?
உன்கோலால் இந்த தீயவினை கொல்லக்கூடாதோ?

அப்பழுக்கான உள்ளம் இல்லையென்றாலும்,
அப்பனே! நீ அதிலும் உறைகின்றாய் நான் உணர்கிறேன்.
இதிலென்ன விந்தை?
பாதாளக்கறியை தோண்டினால் தான் வைரம் கிடைக்கும்!
என்னைத் தடுத்தாட்கொண்ட இறைவா!
ஏராளக்கறைபடிந்த என்மனதில், நீ் வைரமாய் பாய்ந்து நிலைப்பதால், ஓர் நாள் அழுக்கை அழகாய் மாற்றுவாய்!…ஏது இனிகவலை!!

வேதசாரம் அவதாரம்


ஶ்ரீ ராமஜயம்

வருஷம் நூறு ரூபம் தரிக்க ஆசை கொண்டது வேதசாரம், அது

அனுஷத்தில் உதித்தது , உரு ஓர் அருட்பெரும்  அவதாரம்!

மனுஷனோடு சகல  உயிர்கட்கும் இன்றும் என்றும் அதுவே ஜீவாதாரம்! மஹா

புருஷரான ஶ்ரீ பெரியவா அவதாரம் செய்த காலத்தில்
ஜனித்தோம். இந்த தெய்வ

கடாக்‌ஷம் பெற நாம் முற்பிறவியில் என்ன கடுந்தவம் செய்தோம்?

வர்ஷமாய் இன்றும் அவர் பொழியும் அருளில் திளைக்க, நம்
மனசும் நேர்மையான பக்தியில்  அவரை நினைந்து பணிந்தால், தடுத்தாட்கொள்வாரே!!!

ஶ்ரீ மஹா பெரியவா பத்ம பாதம் ஸரணம்!!!

ஶ்ரீ மஹாபெரியவா பத்ம  ஸரணம்!!!

ஶ்ரீ மஹாபெரியவா பத்ம  ஸரணம்!!!

ஒரே வழி..அது ஸரணாகதி


ஶ்ரீ ராம ஜயம்
ஶ்ரீ சங்கரா,
மேட்டூர் ஸ்வாமிகளுக்கு தாங்களே
திருமூலட்டாணம்
அடுத்த தலைமுறைகள் உங்களை அறிய அவரே
ஒருமூலக்காரணம்

தோர்ப்பி:கரணம் முதல்
வியாகரணம் வரை சொன்ன தெய்வக்குரலெனும்
பெருநிதியை பெற, திரு. ரா.
கணபதியும் ஒரு மூலக்காரணம்

விதேஹ முக்திக்குப்பின்
சூக்‌ஷ்ம ரூபம் தரித்த சர்வவ்யாபியே சர்வக்ஞனே எங்கள்
க்‌ஷேமத்தை மட்டும் எண்ணியே
இவர்களைபோல் மஹான்களை ஈன்றாயே
என் தாயே தடுத்தாட்க்கொண்ட தெய்வமே
இக்கடன், கலியுகம் முழுதும் வாழ்ந்து புண்ணியம் செய்தாலும் தீராதே ..
ஒரே வழி…அது ஸரணாகதி!!!!
உங்கள் திருவடி மலர் துணை …உங்கள் பத்ம பாதம் துணை
ஶ்ரீ மஹா பெரியவா பத்ம பாதம் ஸரணம்

பேராசையாயினும், பெரியவா கொடுத்தருள்வாய்


ஶ்ரீ ராம ஜயம்
தும்பிக்கையானை சீர்ஔவை
நம்பிக்கையுடன் வேண்டி
பந்தமில்லா வாழ்வடைய கிழவியாகி
புந்தியில் வைத்து அடிபோற்றினாள்.

முகுந்தனிடம் என்றும் உனை மறவாதிருக்க
குந்தியும் துயர் வாழ்வு வேண்டிப் பெற்றாள்

வந்தனைக்குரிய அப்பையரோ மதியை
மந்தமாக்கி தன்னை தெளிவாக்கிக் கொண்டார்

கந்தா என மனம் கதற அருணகிரியாருக்கு
எந்தாய் அண்ணாமலையில் அருள் பொழிந்தாய்

அம்மையாரும் தன்னை எலும்புக்கூடாக மாற்றி
செம்மையான திருஆலங்காட்டில் உன் ஆடலுக்கு தாளம் போடுகிறார்

ஆண்டாள் காதலால் ஈரேழு
அண்டங்கள் படைத்த
ஶ்ரீரங்கஸாயிக்கு சூடிக் குடுப்பாள்

திருவாசகத்தால் ஸபாநாயகனை
மணிவாசகரும் சிக்கென பிடித்தார்

முனுசாமியும்  நடராஜப்பத்தால்
சிவகாமி நேசனை கட்டி அணைத்தார்

முந்தையோர் செய்த தவப்பயனோ என்
தந்தைதாய் செய்த புண்ணியமோ …இவை அனைத்தையும் படித்தேன்..ஆனால் கதை படித்ததோடு நின்றேன் ..என் சொல்ல
என் கர்மவினையோ?

த்ரிவேணி சங்கமத்தில்
த்ரிமூர்த்தி பரம்பொருளை
தம்பதி சஹிதமாக தரிசிக்கும்
சம்பத்தை அளித்து, அதோடு நில்லாமல்  சர்வ
சாதாரணமாக முக்தியும் குடுத்தாய்
சாத்தனூர் மாமாவிற்கு!

புரந்தரதாசன் எனும் சிறு பிள்ளை
இறந்த பின் மறுபிறவியில்லாமல் இருக்க
சந்தர்ப்பம் வரும் போது
தர்ப்பை மூலம் மீதி ஜன்மம் கழித்தாய், அந்த ஆன்மாவுமினி
கர்ப்பப்பை காணாது செய்தாய்

மேட்டூர் ஸ்வாமிகளுக்கு நீங்கள்
திருமூலட்டாணம்
அடுத்த தலைமுறைகள் உங்களை அறிய அவரே
ஒருமூலக்காரணம்

இவா அனைத்து யோகிகளும்
பெரியவா என்ற பரம்பொருளின் மாகணங்களே!

இப்பேறு அடைய அருகதை இல்லை.. அடியார்க்கு அடியேனாக பாவிக்க அவ்வளவு புண்ணியமும் வங்கியில் இல்லை ..
மணவைமுனுசாமி அவர்கள் சொல்வதுபோலாவது இருக்க அருள் செய்வாயா? “தொண்டர்க்கு தொண்டராம் அவர் தொண்டரின் தொண்டராய்”

இது பேராசையென்றாலும், தடுத்தாட்க்கொள்ளும் இறைவா கொடுத்தருள்வாய்

பார்போற்றும் ஈசனவன்!


ஶ்ரீ ராமஜயம்
பார்போற்றும் ஈசனவன்! கடைக்கண்
பார்வைக்கு ஏங்கும் நீசன் மனம்! தினம்
சோர்ந்தயராமல் புரிய தவம்! மா
உயர்நிலை அடைய கிடைக்கும் வரம்!
அவர் தலையில் இருக்கும் எருக்கம் , பொற்பாதம்
சரண்புக மதி நிம்மதியேற்க்கும் , வினை
தீராது புகுந்த கற்பம் , இனி
வாராது பத்மபாதம் பணிந்த பின்னும் , எனை
தடுத்தாட்கொண்ட இறைவன், பரமன், பாமரன்
மனதில் நின்று நற்கதிதருவன்.
திருச்சிற்றம்பலம்

இனி உன் சொல் கேட்ப்பேன்


ஶ்ரீ ராமஜயம்
நவ நாகரிகம் ஏற்று அகக்கண் மறைத்தேன்
நவ நிதியும் தரும் வேத நெறி திருமறைத்தேன் ஒழுகேன்
க்ரஹஸ்த தர்மத்தை தொலைத்தேன்.
நவக்ரஹம் மேல் பழிபோட்டு தப்பவா?  சிவ சிவா!
உன் அனுக்ரஹம் போதும் பெரியவா
தடுத்தாட்கொள்ளும் மகாதேவா
இனி உன் சொல் கேட்டு நடப்பேன்
இனிய நற்செயலாலேயே உனை ஆராதிப்பேன்.
அரனே அயனே அறம்காக்கும் வேந்தனே உனை
சரண் புகுந்தேன் வரமருள்வாய்.