நூறு கண்ட என் மஹாபெரியவா


ஶ்ரீ ராமஜயம்

நூறு கண்ட என் மஹாபெரியவா
பூரண ஆயுசு எனக்கும் வேண்டும் தா

பாதி வாழ்க்கை போயிட்டுதே மஹாபெரியவா
மீதில ஞான வேட்கை வீசிடுவாய் மஹாபெரியவா

பாவமூட்டைய உதறி தள்ளி  புண்ணியம் கூட்ட என் மனம் துள்ளி  அலைய வேண்டும்  என் மஹாபெரியவா

உன்னை மட்டுமே நினைக்கும்  பெரும்பேறு வேண்டும் என் மஹாபெரியவா

இந்த அனைத்தும் நடக்குமா அது உனக்கு மட்டும் தானே தெரியும் என் மஹாபெரியவா

ஒரு இச்சை இது மட்டும் மறுக்காம போடு பிச்சை

சதா மஹாபெரியவாபுராணம் படிக்க , கேட்க வேண்டும் , ஆனந்தம் ஸ்புரிக்க வேண்டும்,
மரணம் வரும் தருவாயில்
மஹாபெரியவாளான உன் ஸ்மரணம் வேண்டும். உன் திருவாய் மலர்ந்து என் முன்னே நீ இருக்க வேண்டும்

பசியோடு இரு கையேந்தி நிற்கிறேன்
புசிக்க இல்லை எந்நாளும் உன்னை பூஜிக்க அது உனக்கு தெரியாதா என்ன?
வேதநெறியான பொருளே பிச்சைக்காரனுக்கு தாக்ஷண்யம் காட்டு ஶ்ரீ  தக்ஷிணாமூர்த்தி  ப்ரபோ !!! மனப்பாத்திரம் பார்க்காம பிச்சை போடு க்ருபோ !!

Advertisements

பார்போற்றும் ஈசனவன்!


ஶ்ரீ ராமஜயம்
பார்போற்றும் ஈசனவன்! கடைக்கண்
பார்வைக்கு ஏங்கும் நீசன் மனம்! தினம்
சோர்ந்தயராமல் புரிய தவம்! மா
உயர்நிலை அடைய கிடைக்கும் வரம்!
அவர் தலையில் இருக்கும் எருக்கம் , பொற்பாதம்
சரண்புக மதி நிம்மதியேற்க்கும் , வினை
தீராது புகுந்த கற்பம் , இனி
வாராது பத்மபாதம் பணிந்த பின்னும் , எனை
தடுத்தாட்கொண்ட இறைவன், பரமன், பாமரன்
மனதில் நின்று நற்கதிதருவன்.
திருச்சிற்றம்பலம்

இனி உன் சொல் கேட்ப்பேன்


ஶ்ரீ ராமஜயம்
நவ நாகரிகம் ஏற்று அகக்கண் மறைத்தேன்
நவ நிதியும் தரும் வேத நெறி திருமறைத்தேன் ஒழுகேன்
க்ரஹஸ்த தர்மத்தை தொலைத்தேன்.
நவக்ரஹம் மேல் பழிபோட்டு தப்பவா?  சிவ சிவா!
உன் அனுக்ரஹம் போதும் பெரியவா
தடுத்தாட்கொள்ளும் மகாதேவா
இனி உன் சொல் கேட்டு நடப்பேன்
இனிய நற்செயலாலேயே உனை ஆராதிப்பேன்.
அரனே அயனே அறம்காக்கும் வேந்தனே உனை
சரண் புகுந்தேன் வரமருள்வாய்.

என் அடிமை சாசனம் பெரியவா உன் திருவடியில் ஸரணம்


ஶ்ரீ ராமஜயம்

எத்தனை சக்திவைத்தாய், இந்த அற்ப ஜீவனுக்குள்ளும்,
இத்தனை சுமை தாங்க!

பெற்றெடுத்த தாய்தந்தைக்கு பிறவிக்கடன் ஒரு மூட்டை!
கற்றுக்கொடுத்த குருஅனைவர்க்கும் மொத்த கடன் ஒரு மூட்டை!
பித்ரு கடன் ரிஷி கடன் தேவ கடன் என மும்மூட்டை!
குற்றம் பொறுக்கும் கற்புடை மனைவியின் பாசக்கடன் ஒரு மூட்டை!
ஈன்றெடுத்த திருச்செல்வனின் நேசக்கடன் ஒரு மூட்டை!
உற்றமாம் உறவினர் நண்பரின் அன்புக்கடன் ஒரு மூட்டை!
உயிர்வளர்க்கும் பஞ்சபூதங்களுக்கான கடன் ஒரு மாமூட்டை!
பயிர்செய்த முற்பிறவி பாவபுண்ணியமெனும் கோர மூட்டை! போதாதர்க்கு
இப்பிறவியில் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் எண்ணிலடங்கா கர்ம மூட்டை!
அடுக்கிக்கொண்டே போகலாம் மூட்டைகளை,
எப்படித்தான் எனை சுமக்க வைக்கிறாயோ உன் மாயையால்!
எடுக்கவைப்பாய் பலஜன்மம் இக்கடன்னைத்தும் தீர,
தடுத்தாட்கொண்ட பெருமானே! நீ ஆட்கொண்டதால் வந்த பெருங்கடனை,
கோடானுகோடி ஜன்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாதே!  அதற்க்கு பதில் உன்
மீளா அடிமையாய் உந்திருவடிகீழ் ஸரண்புகுவேன், என் கூற்றை.
மீறாமல் கருணை கொண்டு அருள் புரிவாய்,
நாடகமும் காண்பித்தாய் ஆலாலசுந்தரரோடு திருநாவலூரில்,
மாபாதகமே செய்தவன் ஆனாலும் எனை மன்னிப்பாயா?
நம்பிஆருரனை தடுத்தாட்கொண்டாய் அடிமை ஓலைக்காட்டி
நம்பிவந்து ஸரணடைந்தேன், கெஞ்சுகிறேன் நான்
புலம்பி கதறுகிறேன் செவிசாய்ப்பாய் இப்போதே உன்
அன்பினால் ஏற்ப்பாய் உன் பாதாரவிந்த்தில் மீளாஅடிமையாய் அனுமதிப்பாயே!
ஶ்ரீ மஹாபெரியவா பத்ம பாதம் ஸரணம்! ஶ்ரீ மஹா பெரியவா பொற்பாதம் ஸரணம்!

யாதுமாகி நின்றானே! பெரியோனே!

மதிசூடிய பெம்மான் அவனே, என்
மதியும் அவனே, என் விதியும் அவனே, மதியினில் ஊறும் எண்ணோட்டமும் அவனே, மதியென்ற நதியில் தெரியும் நினைவலையும் அவனே! உயிர்க்கொண்டு போம்பொழுது மீதி நிலைக்கும் நிதியும் அவனே! எனை
தடுத்தாட்கொண்டு அருளும் நற்கதியும் அவனே!

“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”


ஶ்ரீ ராமஜயம்

“என்ன பெருந்தவம் யான் செய்ததறியேனே, என்னையும் காஞ்சி முனி ஆட்கொண்டதென்சொல்வேன்”
——————————————————————–
அனுதினமும் புலம்பி தத்தளிக்கும் ஏழைகட்கு
அனுராதா நக்‌ஷத்திரம் தோனியானதே எல்லா
அணுக்களிலும் இருக்கும் பெரியவா, அவர் கடைக்கண்ணின்
அணுமின் சக்தி சம்சார கடலில் நங்கூரமானதே!

“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”  அந்த பரப்ரஹ்மம் அவதாரத்துக்கு தேர்ந்து எடுத்துண்ட அனுஷ நக்‌ஷத்திர்த்துல உலகம் முழுக்க கொண்டாடற இந்த காலக்கட்டத்துல , நாங்களும் இந்த பக்திஸாகரத்துல கலந்துக்கற பேறு பெற்ற பாக்கியசாலிகள்.

இந்த ஒரு ப்ராப்த்தம் மட்டுமே எங்கள கறை சேர்த்துடும்னு வாழ்ந்துண்டு இருக்கோம், இருப்போம்.

நாங்கன்னா, இங்க Perth, Australia ல கர்ம வினையால கடல் தாண்டி வந்து ப்ராஹ்மண்யத்த தொலச்ச துர்பாக்கியசாலிகள்.

அணுதினம் கார்த்தால எழுந்ததுலேர்ந்து ராத்திரி கட்டைய சாய்க்கர வரைக்கும் நெஞ்சுக்குள்ளேயே புழங்கி கண் கலங்குற பாமரர்கள். பெரியவாளோட குரல் ” வேத அத்யயனம் தான் ப்ராஹ்மணனுக்கு ப்ரமாணம், அது மறந்துடாதே”…இந்த திருவாய்மொழி   கேக்க கேக்க , இப்படி கடல் தாண்டி வந்து மாபாவம் பண்ணிட்டோமேன்னு கதறும் நெஞ்சங்கள்.

சில பேர் சொல்லுவா ..”நான் தெரிஞ்சு பாவம் செய்யர்தோட தெரியாம செய்யற பாவம் ஜாஸ்தி “. நாங்க  தெரிஞ்சு செய்யற பாவம், தெரியாம செய்யற பாவம் ரெண்டுமே கணக்கு பன்ன முடியாத பரிதாப நிலை.

ப்ராரப்த கர்மாமுதல் எல்லா பாவத்துக்கும் நாங்க விமோசனம் கிடைக்க ஒரே ஆயுதம் அவன “ஸங்கரா, என் குற்றம் உன் குற்றம். உன்ன விட மாட்டேன் , விட்டா வேற கதி இல்ல.”  ன்றத உணர்ந்து அவனோட பாதரவிந்ததுல ப்ரார்த்திது சரண் அடையர்து மட்டுமே

இந்த நினைப்போடு எல்லா மாஸ அனுஷத்துக்கும் ஒவ்வோர் ஆத்துலேயும் அந்த பரப்ரஹ்மத்த ஆராதனை பன்ன ஆரம்பிச்சிர்க்கோம்.
இத தொடர்ந்து வர 18/12/14  மஹாபெரியவா மஹா ஆராதனைக்கு முழுநாளும் அவர நினச்சுண்டே அகண்ட விஷ்னு சஹஶ்ரநாம, சிவ சஹஶ்ரநாம, லலிதா சஹஶ்ரநாம, ஶ்ரீ ருத்ர பாராயணம் , அதோடு  ராமாயணம், நாராயணீயம், மஹா பெரியவா அவதார சரிதம், பல ஸ்லோகங்களும் கூட்டு பிரார்த்தனையா ஒரு hall book பண்ணி நடத்தலாம்ன்னு ஆசைப்பட்டு. plan செஞ்சிருக்கோம். பெரியவா அனுக்ரஹமும் உங்களோட நல்லாசிகளும் வேண்டுகிறோம்.
ஶ்ரீ மஹா பெரியவா பத்ம பாதம் ஸரணம்

உன் கடைக்கண் பார்வை அது போதுமே!


ஶ்ரீ ராமஜயம்
“யார்மீது உன்மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வையது போதுமே”-நடராஜப்பத்து

திரு முனுசாமி மஹானின் நடராஜப்பத்து மாணிக்கவாசகரின் பிடித்தபத்து போலவே தெவிட்டாத்தேன்!; மனப்பித்தை குணப்படுத்தும் மாமருந்து; இதில் ஒரு சொட்டு பருகினேன், குருநாதனை நினைந்து உருகினேன். உங்கள் பார்வைக்கு இதோ :

மனம் கற்பக விருக்‌ஷம் வேண்டாதே!
உன் பொற்பத மலரை தேடுதே!
தந்தைக்கு நாதனாய் ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஈன்றாளே
விந்தைமிகு உலகின் மஹைஸ்வர்யம் நீயன்றே!
ஜகத்குருவே! காமாக்‌ஷி அம்பாளே!
ஏகம்பனே! வரதனே! பரம்பொருளே!; ஆதி
கேசவனே!; எனை தடுத்தாட்கொள்ளவே, மனக்
க்லேசம் அகலவே, கடைக்கண் பார்த்து அருளே!
ஶ்ரீ மஹாபெரியவா பத்ம பாதம் ஸரணம்