நூறு கண்ட என் மஹாபெரியவா


ஶ்ரீ ராமஜயம்

நூறு கண்ட என் மஹாபெரியவா
பூரண ஆயுசு எனக்கும் வேண்டும் தா

பாதி வாழ்க்கை போயிட்டுதே மஹாபெரியவா
மீதில ஞான வேட்கை வீசிடுவாய் மஹாபெரியவா

பாவமூட்டைய உதறி தள்ளி  புண்ணியம் கூட்ட என் மனம் துள்ளி  அலைய வேண்டும்  என் மஹாபெரியவா

உன்னை மட்டுமே நினைக்கும்  பெரும்பேறு வேண்டும் என் மஹாபெரியவா

இந்த அனைத்தும் நடக்குமா அது உனக்கு மட்டும் தானே தெரியும் என் மஹாபெரியவா

ஒரு இச்சை இது மட்டும் மறுக்காம போடு பிச்சை

சதா மஹாபெரியவாபுராணம் படிக்க , கேட்க வேண்டும் , ஆனந்தம் ஸ்புரிக்க வேண்டும்,
மரணம் வரும் தருவாயில்
மஹாபெரியவாளான உன் ஸ்மரணம் வேண்டும். உன் திருவாய் மலர்ந்து என் முன்னே நீ இருக்க வேண்டும்

பசியோடு இரு கையேந்தி நிற்கிறேன்
புசிக்க இல்லை எந்நாளும் உன்னை பூஜிக்க அது உனக்கு தெரியாதா என்ன?
வேதநெறியான பொருளே பிச்சைக்காரனுக்கு தாக்ஷண்யம் காட்டு ஶ்ரீ  தக்ஷிணாமூர்த்தி  ப்ரபோ !!! மனப்பாத்திரம் பார்க்காம பிச்சை போடு க்ருபோ !!

Advertisements

என்னுள் பாய்ந்த வைரம்


ஶ்ரீ ராமஜயம்

ஊனழுக்கு, உள்ளமழுக்கு,
உள்ளனுப்பும் ஊணழுக்கு,
உடையழுக்கு, செல்கின்ற நடையழுக்கு, சொல்கின்ற
நாவுமழுக்கு …ஹ்ம்ம் வழக்கமான என் புலம்பல் தான்..புலம்பெயர்ந்ததால் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது.

நாஅடிமை மீள முயற்சியில்லை, அதனால்
நானுன்னடிமையாகும் பேறில்லை!
கோள்களால் வரும் கோளாறோ?
உன்கோலால் இந்த தீயவினை கொல்லக்கூடாதோ?

அப்பழுக்கான உள்ளம் இல்லையென்றாலும்,
அப்பனே! நீ அதிலும் உறைகின்றாய் நான் உணர்கிறேன்.
இதிலென்ன விந்தை?
பாதாளக்கறியை தோண்டினால் தான் வைரம் கிடைக்கும்!
என்னைத் தடுத்தாட்கொண்ட இறைவா!
ஏராளக்கறைபடிந்த என்மனதில், நீ் வைரமாய் பாய்ந்து நிலைப்பதால், ஓர் நாள் அழுக்கை அழகாய் மாற்றுவாய்!…ஏது இனிகவலை!!

வேதசாரம் அவதாரம்


ஶ்ரீ ராமஜயம்

வருஷம் நூறு ரூபம் தரிக்க ஆசை கொண்டது வேதசாரம், அது

அனுஷத்தில் உதித்தது , உரு ஓர் அருட்பெரும்  அவதாரம்!

மனுஷனோடு சகல  உயிர்கட்கும் இன்றும் என்றும் அதுவே ஜீவாதாரம்! மஹா

புருஷரான ஶ்ரீ பெரியவா அவதாரம் செய்த காலத்தில்
ஜனித்தோம். இந்த தெய்வ

கடாக்‌ஷம் பெற நாம் முற்பிறவியில் என்ன கடுந்தவம் செய்தோம்?

வர்ஷமாய் இன்றும் அவர் பொழியும் அருளில் திளைக்க, நம்
மனசும் நேர்மையான பக்தியில்  அவரை நினைந்து பணிந்தால், தடுத்தாட்கொள்வாரே!!!

ஶ்ரீ மஹா பெரியவா பத்ம பாதம் ஸரணம்!!!

ஶ்ரீ மஹாபெரியவா பத்ம  ஸரணம்!!!

ஶ்ரீ மஹாபெரியவா பத்ம  ஸரணம்!!!

ஒரே வழி..அது ஸரணாகதி


ஶ்ரீ ராம ஜயம்
ஶ்ரீ சங்கரா,
மேட்டூர் ஸ்வாமிகளுக்கு தாங்களே
திருமூலட்டாணம்
அடுத்த தலைமுறைகள் உங்களை அறிய அவரே
ஒருமூலக்காரணம்

தோர்ப்பி:கரணம் முதல்
வியாகரணம் வரை சொன்ன தெய்வக்குரலெனும்
பெருநிதியை பெற, திரு. ரா.
கணபதியும் ஒரு மூலக்காரணம்

விதேஹ முக்திக்குப்பின்
சூக்‌ஷ்ம ரூபம் தரித்த சர்வவ்யாபியே சர்வக்ஞனே எங்கள்
க்‌ஷேமத்தை மட்டும் எண்ணியே
இவர்களைபோல் மஹான்களை ஈன்றாயே
என் தாயே தடுத்தாட்க்கொண்ட தெய்வமே
இக்கடன், கலியுகம் முழுதும் வாழ்ந்து புண்ணியம் செய்தாலும் தீராதே ..
ஒரே வழி…அது ஸரணாகதி!!!!
உங்கள் திருவடி மலர் துணை …உங்கள் பத்ம பாதம் துணை
ஶ்ரீ மஹா பெரியவா பத்ம பாதம் ஸரணம்

பேராசையாயினும், பெரியவா கொடுத்தருள்வாய்


ஶ்ரீ ராம ஜயம்
தும்பிக்கையானை சீர்ஔவை
நம்பிக்கையுடன் வேண்டி
பந்தமில்லா வாழ்வடைய கிழவியாகி
புந்தியில் வைத்து அடிபோற்றினாள்.

முகுந்தனிடம் என்றும் உனை மறவாதிருக்க
குந்தியும் துயர் வாழ்வு வேண்டிப் பெற்றாள்

வந்தனைக்குரிய அப்பையரோ மதியை
மந்தமாக்கி தன்னை தெளிவாக்கிக் கொண்டார்

கந்தா என மனம் கதற அருணகிரியாருக்கு
எந்தாய் அண்ணாமலையில் அருள் பொழிந்தாய்

அம்மையாரும் தன்னை எலும்புக்கூடாக மாற்றி
செம்மையான திருஆலங்காட்டில் உன் ஆடலுக்கு தாளம் போடுகிறார்

ஆண்டாள் காதலால் ஈரேழு
அண்டங்கள் படைத்த
ஶ்ரீரங்கஸாயிக்கு சூடிக் குடுப்பாள்

திருவாசகத்தால் ஸபாநாயகனை
மணிவாசகரும் சிக்கென பிடித்தார்

முனுசாமியும்  நடராஜப்பத்தால்
சிவகாமி நேசனை கட்டி அணைத்தார்

முந்தையோர் செய்த தவப்பயனோ என்
தந்தைதாய் செய்த புண்ணியமோ …இவை அனைத்தையும் படித்தேன்..ஆனால் கதை படித்ததோடு நின்றேன் ..என் சொல்ல
என் கர்மவினையோ?

த்ரிவேணி சங்கமத்தில்
த்ரிமூர்த்தி பரம்பொருளை
தம்பதி சஹிதமாக தரிசிக்கும்
சம்பத்தை அளித்து, அதோடு நில்லாமல்  சர்வ
சாதாரணமாக முக்தியும் குடுத்தாய்
சாத்தனூர் மாமாவிற்கு!

புரந்தரதாசன் எனும் சிறு பிள்ளை
இறந்த பின் மறுபிறவியில்லாமல் இருக்க
சந்தர்ப்பம் வரும் போது
தர்ப்பை மூலம் மீதி ஜன்மம் கழித்தாய், அந்த ஆன்மாவுமினி
கர்ப்பப்பை காணாது செய்தாய்

மேட்டூர் ஸ்வாமிகளுக்கு நீங்கள்
திருமூலட்டாணம்
அடுத்த தலைமுறைகள் உங்களை அறிய அவரே
ஒருமூலக்காரணம்

இவா அனைத்து யோகிகளும்
பெரியவா என்ற பரம்பொருளின் மாகணங்களே!

இப்பேறு அடைய அருகதை இல்லை.. அடியார்க்கு அடியேனாக பாவிக்க அவ்வளவு புண்ணியமும் வங்கியில் இல்லை ..
மணவைமுனுசாமி அவர்கள் சொல்வதுபோலாவது இருக்க அருள் செய்வாயா? “தொண்டர்க்கு தொண்டராம் அவர் தொண்டரின் தொண்டராய்”

இது பேராசையென்றாலும், தடுத்தாட்க்கொள்ளும் இறைவா கொடுத்தருள்வாய்

பார்போற்றும் ஈசனவன்!


ஶ்ரீ ராமஜயம்
பார்போற்றும் ஈசனவன்! கடைக்கண்
பார்வைக்கு ஏங்கும் நீசன் மனம்! தினம்
சோர்ந்தயராமல் புரிய தவம்! மா
உயர்நிலை அடைய கிடைக்கும் வரம்!
அவர் தலையில் இருக்கும் எருக்கம் , பொற்பாதம்
சரண்புக மதி நிம்மதியேற்க்கும் , வினை
தீராது புகுந்த கற்பம் , இனி
வாராது பத்மபாதம் பணிந்த பின்னும் , எனை
தடுத்தாட்கொண்ட இறைவன், பரமன், பாமரன்
மனதில் நின்று நற்கதிதருவன்.
திருச்சிற்றம்பலம்

பெரியவா எனக்கும் இருக்கு பெரிய வா..நான் புலம்பறேன், நீ இப்ப கேக்க வா!


ஶ்ரீ ராமஜயம்
Facebook ல”what’s on your mind?” அப்படின்னு பார்க்கும்போது இது தான் தோனுது..
என்ன உன் மனநிலை?….மனம் ஏன் நிலையில்லாமல் அகங்காரம் கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறது என்ற கவலையே இப்போது என் மனநிலை…
நிங்க நினைப்பது correct….என்னடா உளரறான்னு தானே யோசிக்கறீங்க…

உலைத்து உழன்று உலை போல் கொதிக்க்ர்து மனசு… வேற எங்கே போறர்து ….பெரியவா படத்துக்கிட்ட போய் புலமபற்து தானே எல்லோருக்கும்  வாடிக்கை….உங்களுக்கு இப்படி தோன்றியது உண்டா? கண்டிப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ..கீழே புலம்பல பார்த்துட்டு சொல்லுங்கோ..
ஶ்ரீ மஹா பெரியவா ஸரணம்
——————————————

ஶ்ரீ ராமஜயம்

பெரியவா எனக்கும் இருக்கு பெரிய வா..நான் புலம்பறேன், நீ இப்ப கேக்க வா!

ஶ்ரீ ராமஜயம்

ஏன் உனக்கிந்த லீலை?
என் மனம் ஒர் நிலையில்லை உன்னை
ஒரு பொழுதும் மறக்காமல் இருக்க ஏன் முடியவில்லை?
அது கூட தேவையில்லை நீ
சொன்ன கோடானுகோடி உபதேசத்தில் ஒன்றிரண்டாவது
கடைசிவரை கடைபிடிக்க அனுக்ரஹித்தால் என்ன உனக்கு?
அதற்கு கூட அருகதையில்லாத பாவஜன்மமா?
கருணாஸாகரம்னு உன்னை எல்லாரும் கொண்டாடராளே!
எந்த யோக்யதையும் இல்லாம இங்க ஒருத்தன் திண்டாடறானே!
இவன் மேல உன் கடைக்கண் படக்கூடாதா?
அப்படி என்ன ஒரு கரிசனம்?
உன்னோட திவ்ய தரிசனமா வேண்டறேன்? இல்ல
வில்வம் குடுத்த புண்ணிய  புரந்தரதாசன் கேட்டது போல்
மறு சனனமே இல்லாம கறை சேக்கச் சொன்னேனா?
ஈரேழு உலகையும் அளக்கும் உன்னடி!
உன்னை நேர்மையான பக்தியில் கட்டிப்போடும் புண்ணியர் நடுவில்
பகல் வேஷம் போடும் நான் அவாளோட கால்தூசி பெற மாட்டேன், இருந்தாலும்,
உன் பாதாராவிந்தத்தின் தூசி
என் மேல் பட வேண்டும் என்று கேட்டதுண்டு, மேலும் உன்
திருவடிநிழலில் ஒர் சிறு இடம் தயவுசெய்து கொடு என்றும் கேட்டதுண்டு..
செரி,அது போகட்டும். எனக்கு எப்ப புனிதமான பக்தி ஏற்ப்படர்தோ அப்ப நீயே கொடுத்துடுவ. சந்தேகமில்லை.
இப்ப நான் கேட்பதை காது கொடுத்து கேளேன் பெரியவா!
உன் விளையாட்டு போதும்
இனியும் இந்த ஜீவன் தாங்காது.
நான் என்ற வேடம் போட்டு
கர்வம் என்ற சாயம் பூண்டு
மாயை என்ற மேடை எறி
காமக்ரோதமெனும் நாடகாமாடி
ஐம்புலன்களாலும் செய்யத்தகாதவை செய்து
தத்தளித்து, திண்டாடி
தண்டமாய் வெறும்
உண்டுறங்கி இருக்க விதியா?
அண்டமாளும் தண்டமேந்தும் தாண்டவா!
மந்தமான இந்த பிண்டம்
ஆதிஅந்தமாய் உன்னை மட்டுமே நினைத்து
சிந்தை சீர் செய்ய நீ சொன்ன போதனையை
பந்தமாக்கி கறை சேர வழிவகுப்பாய் என்னை
தடுத்தாட்கொள்வாய்.
ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா ஸரணம்
ஸர்வக்ஞ்யா ஸர்வவ்யாபி
ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா பத்மபாதம் ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா திருவடிமலர் ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா அடிகீழ் ஆனந்தத்தில் திளைக்கும் பக்தர் கூட்டத்திற்கும் ஸரணம்