உன் பாததூளிகை வேண்டுமே!

உ.

ஸ்ரீ ராமஜயம்.

உன் திரு தரிசனம் காண்பேனா?

உன் கரிசனத்தில் திளைப்பேனா?

நித்யானுட்டானம் கடைபிடிப்பேனா? என்

சித்தமொடுங்க திருமூலட்டானம் செல்வேனா?

திருமறையும் திருமுறையும் முற்றோதுவேனா?

எதிர்மறை வினைவரினும் சிதறாமல் வாழ்வேனா?

சுகவாஸம் பேணாமல் உபவாஸம் இருப்பேனா?

ஸ்வாஸத்தோடு ஐம்புலன் ஆள்வேனா?

வக்கிர எண்ணமில்லா உளம் கொள்வேனா? காலச்

சக்கிரசுழலில் உழளாமல் மீள்வேனா?

உன்னை நான் அடைவேனா? அதனால்

என்னையே நான் அறிவேனா?

எது, என்று எங்கு நடக்கும்- அது உன் தீர்ப்பு! எனினும்

இவ்வனைத்தும்  நடக்க நான் கொண்ட தீர்வு, இன்றே

உன் பாததூளிகை ஸரண் புகுந்தேன்! இனி நீ இடும்

விதியால் எனை ஏய்க்க முடியாது! வெண்

மதியோடும் அம்மை ஒர் பாகம் பூண்ட ஸ்ரீ 

சந்திரசேகரரே ! ஒப்பில்லா குருவே! கருணை உருவே! உன்

தந்திரம் இனி செல்லாது! என்னை ஆட்கொள்ளும் வரை ஓயமாட்டேன்

உன் காருண்ய மழை என் மேல் விழும் வரை காத்திருப்பேன்!

உன்னோடு உன் நாமம் பெரிது, அதைவிட உன் காருண்யம் கணக்கில் அடங்கா…ஆகவே நான் காத்திருப்பேன்! 

உன் கருணை மழை பொழிய காத்திருப்பேன் ஸ்ரீ மஹாபெரியவா!

Advertisements

கால் தூசிடா!


ஸ்ரீ ராமஜயம்
ஸ்ரீ பெரியவா ஸரணம்

உன்னோட கால் தூசி பெறுவனா?

எல்லாரும் இப்படி சாதாரணமா சொல்லி கேட்டதுண்டு.
இத பத்தி பெருசா இப்ப வரைக்கும் யோசிச்சதில்ல. அதென்ன கால் தூசி..

ஆனா, பெரியவா உபன்யாசத்துல ஒன்னு, அத  கேட்டு புரிஞ்சப்புறம்  “கால் தூசி” மகத்துவம் நன்னா புரிஞ்சுது.
அதுக்காக சொல்ல வந்த விஷயத்துலேர்ந்து கொஞ்சம் digress ஆறேன். don’t mind.

ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்துல இருப்பத சொன்னார்.. “ஸ்ருதி சீமந்த ஸிந்தூரி க்ருத பாதாப்ஜ தூளிகா”…
“ஸ்ருதி / எழுதாக்கிளவி / மறை “-  எல்லாம் வேதத்தையே குறிக்கின்ற சொற்கள். அப்பேற்பட்ட வேதம் யாருடான்னா, ஸ்ரீ பரமேஸ்வரனோட மூச்சுக்காத்தாம். அதாவது அந்த நிர்குணபரப்ரஹ்மமத்த, மனுஷ்ய ஸ்வரூபத்துல நம்ம நினச்சோம்னா, அந்த ஸ்வ்ரூபத்துக்கு உயிரா இருக்கிற மூச்சுக்காத்து வேதம். வேத மாதான்னு தான் சொல்ற வழக்கம். வேத பிதான்னு சொல்ற வழக்கம் இல்ல. அந்த வேத மாதா இல்லன்னா சிவன் இல்ல.
சிவன்ல இருக்கிற “இ” தான் அம்பாளாம். சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல் சிவமில்லை…இது நம்ம கேட்டது.  சக்தியில்லயேல் சிவம் வெரும் சவம்..இது கேட்டதுண்டா?.. சிவத்துல இ எடுத்துட்டா சவம்னுன்னா ஆர்றது!.. இது எத உணர்த்தற்துன்னா,  அம்பாள் இல்லாம எதுவுமில்லை! சரி நான் நினச்சு சொல்ல வேண்டியதுக்கு வரேன்.
1) அப்பேற்பட்ட வேதம் எங்கேர்ந்து வந்ததுன்னு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்றது..அம்பாளோட கால் தூசி லேர்ந்து உருவானது!.
2) இது தவிர ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் கொடுத்த ஸ்ரீ செளந்தர்ய லஹரியில்  எடுத்தவுடனே வர்றது..”. தநீீயாம்சம் பாம்சும் தவ சரண பங்கேருஹபவம்”- இந்த ஸ்லோகத்துல, பிரம்மன் அம்பாளோட கால் தூசி எடுத்து ஈரேழு உலகங்கள், அதில் உறைய உயிரினங்கள் படைக்கிறதாக ஸ்ரீ பாத தூளிகை ரொம்ப உசத்தியா சொல்லியிருக்கு.
3) 33 கோடி தெய்வமும் குடி கொள்ளும் பசு செல்லும் பாதையில் கிளம்பும் தூசி மஹோன்னதமான பவித்திரம்ன்னு ஸாஸ்த்திரம் சொல்றது.
4) ராம நாமத்துக்கு இணையா ராமர் பாதுகை..பரதன் நடத்திய ஸ்ரீராம பாதுகா பட்டாபிஷேகம், ஆசார்யாளோட ஸ்ரீ குரு பாதுகா ஸ்தோத்திரம்..இப்படி பாதுகைக்கு உசத்தியான ஸ்தானம் இருக்கற்து ஸ்ரீ பாதுகையில் படிஞ்ச தூளிகையால் தானோ?

இனிமேல் “இது எனக்கு கால் தூசுடா” அப்படின்னு சொல்லறத்துக்கு முன்னாடி அது சரியா தவ்றான்னு நம்ம யோசிச்சு பார்த்துக்கலாம்.

எனக்கு என்ன தோன்றதுன்னா “கால் தூசி பெறுவேனா” அப்படின்னு சொன்னா பாவம்ன்னு தோன்றது. “கால் தூசி பேறு வேணும்” னு ப்ரார்த்தனை பண்ண தோன்றது.

ஸ்ரீ பெரியவா ஸரணம்

“என்ன பெரும் தவம் நான் செய்ததறியேனே”

ஸ்ரீ ராமஜயம்
மெல்பர்னில் பெரியவா அனுஷ பூஜையில் ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் கிரிஷ். இவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரம சந்ததி. எப்பேர்பட்ட பேறு!!.இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இங்க வந்திருக்கார். அவர்கிட்ட விளையாட்டா சொன்னேன்…”பெரியவா பூர்வாஸ்ரமத்துல உங்க பரம்பரைல வந்திருந்த்தாலும் (origin of lineage hoysala brahmin from Karnataka) , என்ன மாதிரி தமிழ் நாட்டுல பொறந்தவாளுக்கு கிடச்ச பெரும்பேறு உங்களுக்கு கிடைக்கல”..இப்ப அந்த பரிபாஷனையை நினச்சு பார்த்தேன்.
விளையாட்டா பேசினாலும் எவ்வளவு உண்மை!

பெரியவா பரப்ரஹ்ம வஸ்து!!!அவருக்கு ஜாதி இன மொழி வேறுபாடு கிடையாது ..நிர்குணபரப்ரஹ்மம் தான். இருந்தாலும் அந்த பரம்பொருள் கருணை கடாக்‌ஷம் நமக்கு தெரிஞ்ச தாய்மொழியிலேயே நமக்கு ஆசி வழங்கியிருக்கு..கோடானுகோடி உபதேசத்துல எதோ ஒன்னு ரெண்டாவது இந்த ஈனப்பிறவியின் மந்த புத்திக்கு எட்டற்துன்னா அவர்  நம்ம ஊர அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்ததுனால மட்டும் தான்.

இல்லாட்டி மஹாராஷ்ட்ராலேர்ந்து வந்த பவார் மாதிரியோ இல்ல ஆந்திராவில் இருந்த சிறுவன் புரந்திரன் மாதிரியோ இல்ல மைசூர் மஹாராஜா சாண்டூர் மஹாராஜா மாதிரி பிறக்கும் பாக்கியம் இருந்திருக்கனும்.

இந்த பூர்வஜன்ம பலன் இல்லாம வேற மாநிலத்துல நம்ம பிறந்திருந்தா பெரியவாள பார்த்தா, இப்ப நம்ம ஸ்ரீ சாய்பாபாவ பார்த்தோ ஸ்ரீ ராகவேந்திரர பார்த்தோ கண்ணத்துல போட்டுண்டு போறவரைக்கும் தான் புத்திக்கு எட்டியிருக்கும்.

எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் சர்வக்ஞன் னோட கிட்ட இருந்து வாழ்ந்து அபூர்வ தவப்பயன அனுபவிச்சு ஆனந்த சாகரத்துல இருந்தா, இப்பவும் இருக்கா…அப்படி ஒரு பதவி கிடைக்காட்டியும் இன்னியளவுக்கு அவர நினச்சு உருக வைக்கிறாரே அந்த தவயோகி!

ரொம்ப நல்லவனா இருக்கேன்னு சொல்லிக்க முடியாட்டியும், ரொம்ப கேவலமா வாழ வைக்காம என்ன தடுத்தாட்கொண்டுண்டு இருக்கற அந்த பரதேவதைக்கு என்ன ப்ரதிபலன் செஞ்சு கடன் தீர்ப்பேனோ! எவ்வளவு ஜன்மம் எடுத்து நல்நெறில அறவாழ்வு வாழ்ந்து சேவை செஞ்சாலும் ஈடாகாது. பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு அவரோட கலந்துக்கற வரைக்கும் இந்த தாபமும் தீராது..
“உந்தன் திருவடி மலரினை துனையென சிந்தை மகிழ்ந்து நான் வந்தனை புரிந்திட”… ஸ்ரீ மஹாபெரியவா திரு அடி மலர் துணை.. ஸ்ரீ மஹாபெரியவா ஸரணம்.

வேதஸாரத்தை கண்டார் சாரத்தில் !

2

ஸ்ரீ ராமஜயம்

சாரத்தில் சஞ்சாரம் செய்தபோது

வேதசாரத்தை கண்டார் !!!!

பரமகுரு அன்று பெற்றெடுத்தார் பரமனை – கண்டது

சுவாமிநாதனை  அன்றோ!

கலவையிலே நின்றார் மனக்கவலை அகன்று ,

உலகுக்கு ஈன்றார் ஞான சாகரத்தை அன்று !!

ஆதி குரு வினவினார் “கிம் ஸம்சாரே  ஸாரம் ?” எனக்கு

அந்தி வரை அவர் திருவடி மலர் துணை என்ற நினைப்பே போதும் …இது மட்டுமே  ஸாரம் !!! இது மட்டுமே   ஸாரம்!!! இது மட்டுமே ஸாரம் !!!

ஸ்ரீ மஹாபெரியவா திரு அடி மலர் துணை

சோமப்ரதோஷம் அனுஷம்

Sri Ramajayam

ஶ்ரீ ராமஜயம்

சந்திரசூடா! சர்வேஸ்வரா!
சங்கரா! கருணாகரா!

சோமப்ரதோஷ நாயகா!
அனுஷ தாரக தயாபரா!

சந்திரசூடா! சர்வேஸ்வரா!
சங்கரா! கருணாகரா!

மனக்லேச த்வம்ச காரகா!
சித்தசுத்தி காரணா! கற்பகா!

சந்திரசூடா! சர்வேஸ்வரா!
சங்கரா! கருணாகரா!

நிர்பயகுண தாதா! ஜகதம்பா!
நிர்விகல்பா! நிரந்தரா!

சந்திரசூடா! சர்வேஸ்வரா!
சங்கரா! கருணாகரா!

ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்
ஶ்ரீ மஹாபெரியவா ஸரணம்

Posted from WordPress for Android

ஶ்ரீ பெரியவா உபவாசம்


ஶ்ரீ ராமஜயம்
ஶ்ரீ மஹாபெரியவா போற்றி
இன்று நான் ஶ்ரீ பிரதோஷம் மாமா பேரன் ஶ்ரீ ஶ்ரீராம் கொடுத்த “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்ற மாணிக்கவாசகரின் வைர சொற்களில் அமைந்த புத்தகம் படிக்க ஆரம்பித்தேன் …first chapterரிலேயே லயித்து விட்டேன் .

ஶ்ரீ மஹாபெரியவா ஏகாதசியன்று நிர்ஜலம் .அது நம்முள் பலர்க்கு அறிந்து இருக்க வாய்ப்பு உண்டு..ஏகாதசிக்கு அடுத்து ஸ்ரவண துவாதசி என்றால், இரண்டு நாளும் நிர்ஜலம் , ஸ்ரவண துவாதசிக்கு அடுத்து சிவராத்திரி வந்தால் மூன்று நாளும் நிர்ஜலம் ..இது சிலர் அறிய வாய்ப்புண்டு …

நிர்ஜலம் – நீர் கூட நாவில் படாமலிருக்கும் ஆசார அனுஷ்டானம்…

இந்த 2-3 நாட்கள் நிர்ஜலம் மடத்து தொண்டர்களுக்கு அரிதான நிகழ்ச்சி இல்லை.. நவராத்திரி ஒன்பது நாளும் நிர்ஜலமாகத்தான் இருப்பார். சில சமயம் 22 நாட்கள் (ஆந்திராவில்) 15 நாட்கள் (காஞ்சியில்) பலமுறை நம் ஶ்ரீ மஹாபெரியவா அனுஷ்டித்திருக்கிறாராம்..இதுவும் அணுக்கத்தொண்டர்கட்கு அரிதான சம்பவம் இல்லையாம் …

ஶ்ரீ மஹாபெரியவா, ஒரு அவதாரம், என்று  அவர் ஸ்தூல சரீரம் பூண்டுஇருக்கும் வரை, உணராமல் இருந்த துர்பாக்கியசாலிகளான நமக்கு மட்டும் இது வியப்பான சமாசாரம்.

தர்மத்திற்கு இலக்கணமாக இரு அவதாரம்.. ஶ்ரீராமாவதாரம், ஶ்ரீமஹாபெரியவா அவதாரம் .  இவர் ஸர்வஞன் ஸர்வவ்யாபி என்பதனால் இப்பொழுதாவது அவரை உணர அந்த காருண்ய மூர்த்தி நமக்கு அனுக்ரஹம் பண்றார். அதனால் நாமும் பாக்கியசாலிகளே!
ஶ்ரீ மஹாபெரியவா திருவடி மலர் துணை…